பொதுப் போக்குவரத்து பாதுகாப்புக்கான இயந்திர மனிதன்

பொதுப் போக்குவரத்து பாதுகாப்புக்கான இயந்திர மனிதன்

1 mins read
c2d23b76-a51a-4843-9c60-e539c77c1ac9
-

நிலப் போக்குவரத்து ஆணையம் தனது பாதுகாப்புப் பணிகளுக்காக தானியக்க இயந்திர மனிதர்களை விரைவில் ஈடுபடுத்தலாம். அத்தகைய இயந்திர மனிதர்களில் ஒன்று, ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால தயார்நிலைப் பயிற் சியின்போது பணியில் ஈடு படுத்தப்பட்டது. கண்காணிப்பு மற்றும் வலம் வரும் ஆற்றலைச் சோதிப்பது இந்த பயிற்சியின் நோக்கம். வருங்காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துணையாக இந்த தானியக்க இயந்திர மனி தர்கள் செயல்படலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்தது.

எஸ்டி என்ஜினியரிங் உரு வாக்கிய இந்த 1.6 மீட்டர் உயரமுள்ள இயந்திர மனிதன் 360 டிகிரி அகலத்தில் பார்ப்பதற்கு ஏழு கேமராக்கள் உதவுகின்றன. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க உதவும் 'ஜிபிஎஸ்' மென்பொருள், 'லைசார்' எனப்படும் லேசர் கதிர்களைப் பயன்படுத்தும் உணர்கருவிகள் உள்ளிட்ட சில நவீன தொழில் நுட்பக் கூறுகள் இந்த இயந்திர மனிதருக்குப் பொருத்தப்பட்டு உள்ளன. இதுபோன்ற ஓர் இயந் திர மனிதனை சிங்கப்பூர் போலிஸ் படை கடந்த மாதம் நிகழ்ந்த 33ஆம் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்திற்குப் பயன்படுத்தியது.

ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திர மனிதன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்