ஊடுருவல்: கடும் நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் தயங்காது

1 mins read
9f34b7f5-fdb1-4fc3-ba0a-f3dbb6f695f0
-

சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் மலேசிய கலன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து அதற்குப் பதில் நடவடிக்கையாக தனது சொந்த துறைமுக எல்லைகளை சிங்கப்பூர் விரிவுபடுத்தி இருக்கிறது. அதோடு, அத்தகைய ஊடுருவல் களுக்கு எதிராக கடுமையான எச்சரிக் கையையும் சிங்கப்பூர் விடுத்துள்ளது. தன்னுடைய எல்லையையும் அரசுரி- மையையும் பாதுகாக்க, தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சிங்கப்பூர் தயங்காது என்று போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் எச்சரித்தார்.

மலேசிய அரசாங்கத்தின் கலன்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்ட போதெல்லாம் இதுவரையில் சிங்கப்பூர் அடக்கி வாசித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய அரசின் கலன்கள் தங் களுடைய ஊடுருவல்களை நிறுத்திக் கொண்டு, 2018 அக்டோபர் 25க்கு முந்தைய நிலைக்குத் திரும்பவேண்டும் என்றும் திரு கோ கோரிக்கை விடுத்தார். ஜோகூர் பாருவின் துறைமுக எல்லையைச் சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் விரிவுபடுத்தப் போவதாக மலேசிய மத் திய அரசாங்கம் இந்த ஆண்டு அக்டோ பர் 25ஆம் தேதி பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அது முதல் மலேசிய கலன்கள், சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் 14 தடவை ஊடுருவி இருக்கின்றன என்று திரு கோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நேற்று சிங்கப்பூர் கரையோரக் காவல் படை கலன் (வலது), மலேசியாவின் கடல் துறை கலன் (இடது) ஒன்றைக் கடந்து செல்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்