எல்ஆர்டி நிலையத்தில் பெண் சடலம்

எல்ஆர்டி நிலையத்தில் பெண் சடலம்

1 mins read
09646f8b-da75-4be6-9211-93fcfabc353d
பெண்ணின் இறப்பிற்குத் தீய செயல் எதுவும் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

பொங்கோல் ஈஸ்ட் இலகு ரயில் பாதையில் (எல்ஆர்டி) உள்ள கோவ் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 33 வயதுப் பெண் ஒருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

இதனையடுத்து, பொங்கோல் ஈஸ்ட், பொங்கோல் வெஸ்ட் எல்ஆர்டி பாதைகள் இரண்டிலும் சேவை நிறுத்தப்பட்டதாக வியாழக்கிழமை இரவு 10.32 மணிக்கு டுவிட்டர் வழியாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அறிவித்தது.

இரவு 10 மணியளவில் உதவிகோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கோவ் நிலையத் தளமேடைக்கு அருகேயிருந்த தண்டவாளத்தில் அப்பெண் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்டது. அவரின் இறப்பிற்கு தீய செயல் காரணமாக இருக்கும் என்று காவல்துறை சந்தேகிக்கவில்லை. விசாரணை தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக இலவசப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.