சுவா சூ காங் எல்ஆர்டி நிலையத்தில் இரு புதிய தளமேடைகள் 27ஆம் தேதி திறப்பு

சுவா சூ காங் எல்ஆர்டி நிலையத்தில் இரு புதிய தளமேடைகள் 27ஆம் தேதி திறப்பு

1 mins read
2bbbf05f-7b94-4ec1-ba4c-1d0d7bc3f320
-

பயணிகள் சிரமமின்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் வசதியாக சுவா சூ காங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் இரு புதிய தள மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளமேடைகள் இம்மாதம் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வரும். ரயிலிலிருந்து இறங்குவோர் இந்தப் புதிய தளமேடைகளைப் பயன்படுத்தலாம். இதனால், இப் போதுள்ள தளமேடைகளிலிருந்து பயணிகள் ரயிலில் ஏற முற்படும் போது ஏற்படும் நெரிசல் குறையும்.

இப்போதுள்ள தளமேடைகளில் இருந்து பயணிகள் ஏறுவதற்கான ரயில் கதவுகள் திறப்பதற்கு ஏழு வினாடி முன்னதாகவே ரயிலில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு வசதியாக புதிய தளமேடைகளை நோக்கி உள்ள கதவுகள் திறக்கப் படும். புதிய தளமேடைகளுக்கென பிரத்தியேகப் படிக்கட்டுகளும் மின்படிகளும் உள்ளன. இடப் பற்றாக்குறை காரணமாக மின் தூக்கி நிறுவப்படவில்லை. சக்கர நாற்காலிப் பயணிகள் போன்று மின்தூக்கிகளைப் பயன் படுத்த வேண்டிய தேவையிருப் போர் இப்போதுள்ள தளமேடை களில்தான் இறங்கவேண்டும்.

உச்ச நேரங்களின்போது கூட்ட நெரிசலைக் குறைக்க இந்தப் புதிய தளமேடைகள் உதவியாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்