பிரதமர் லீ புத்தாண்டுச் செய்தி: சவால்களிலிருந்து மீள்வோம்

பிரதமர் லீ புத்தாண்டுச் செய்தி: சவால்களிலிருந்து மீள்வோம்

2 mins read
9efdd0a9-814b-4c17-8670-87538e75f86d
-

கடினமான, நிச்சயமற்ற உலக நிலவரம், பயங்கரவாத மிரட்டல் மிகுந்த வட்டாரம், இன, சமய சர்ச்சைகளால் பதற்றத்திற்கு ஆளாகும் அண்டை நாடுகள் என பல சவால்கள் இருப்பினும் அவற்றிலிருந்து சிங்கப்பூர் மீளும் என்று தாம் நம்புவதாக பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டுவந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள உலக நாடுகளில் உறுதி குலை கிறது. கடினமான, நிச்சயமற்ற நேரம் இது. வளர்ந்த நாடுகளில் சொந்த தேசியவாத ஆர்வம் மிகுந்துள்ளது. இது அவர்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும். ஆனால், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் அவ்வாறு கதவுகளை மூடிவிட முடியாது. பொதுவில் நின்று சாதிப்பதே நமது சிறப்பான தேர்வு.

"2016ஆம் ஆண்டில் நமது முக்கிய கவனம் பொருளியல் மீது இருந்தது. உலகப் பொருளியல் நிலவரத்தைப் பார்க்கையில் நமது பொருளியல் மோசமடையவில்லை. "இந்தப் புதிய ஆண்டில் நமது பொருளியல் வளர்ச்சி ஒரு விழுக்காட்டுக்கு மேல் இருக் கும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் நம்பிக் கொண்டிருந்ததைக் காட்டிலும் குறைவு என்ற போதிலும் சாதகமான வளர்ச்சியே இது. "கடந்த ஆண்டுவரையில்கூட நமது சொந்த வட்டாரத்தில் பயங்கரவாத மிரட்டல் மிகுந்து வந்திருக்கிறது. அண்டை நாடு களில் இன, சமய சர்ச்சைகள் ஓங்கி அவற் றின் அரசியலைப் பாதித்து, பதற்றத்தையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கி வரு கின்றன. இத்தகைய சூழலில் நமது மக் களின் பற்றுணர்வும் நெகிழ்திறனும் இது போன்ற சவால்களிலிருந்து சிங்கப்பூரை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.