ஈஸ்ட் கோஸ்ட் சாலை வீட்டில் தீ; 20 பேர் வெளியேற்றம்

ஈஸ்ட் கோஸ்ட் சாலை வீட்டில் தீ; 20 பேர் வெளியேற்றம்

1 mins read
d91d1ee3-9e31-4e6b-98fb-d7cc0eff7096
தீயணைப்பாளர்கள் நிகழ்விடத்திற்குச் செல்லுமுன் தீ மேலும் பரவி, நான்கு தரைவீடுகள் பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலுள்ள ஒரு தரைவீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு தீப்பற்றியதில் ஒருவருக்கு இலேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 பேர் வெளியேற்றப்பட்டனர். 12எஸ், ஈஸ்ட் கோஸ்ட் சாலை என்ற முகவரியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து நேற்றிரவு 11.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பாளர்கள் அவ்விடத்திற்குச் செல்லுமுன் தீ பரவி, நான்கு தரைவீடுகள் பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதனையடுத்து, தீயணைப்பாளர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சிகளில் இறங்கினர். பின்னிரவு 1.50 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மீண்டும் தீ மூளாமல் தடுப்பதற்காக, தீப்பற்றிய இடங்களில் மேலும் நீரைப் பீய்ச்சி, தணிக்கும் பணிகள் தொடர்வதாக விடிகாலை 2.40 மணிக்குக் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்தது. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.