லண்டனில் வசித்துவரும் சிங்கப்பூரர் அஞ்சனா வாசன், பிரிட்டனின் ஒலிவியே விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்று சாதித்துள்ளார்.
இவ்விருது பெற்ற முதல் சிங்கப்பூரர் இவர்தான்.
‘எ ஸ்டிரீட்கார் நேம்டு டிஸையர்’ என்ற நாடகத்தில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 36 வயது அஞ்சனா இச்சிறப்புமிக்க விருதைத் தட்டிச் சென்றார்.
சென்னையில் பிறந்த இவர், நான்கு வயதாக இருந்தபோது சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
விருதுக்குத் தமது பெயர் அறிவிக்கப்பட்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தார் அஞ்சனா.
தம் அம்மா, அப்பாவிற்கு நன்றிதெரிவித்துக்கொண்ட அஞ்சனா, “ஒரு மூலையைப் பார்த்து அமர்ந்து அழப் போகிறேன்,” என்று சொனனார்.
இந்த ஒலிவியே விருதுகள், ‘லண்டன் தியேட்டரின்’ ஆஸ்கார் விருதுகள் என அழைக்கப்படுகின்றன.
இம்மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் ராயல் ஆல்பர்ட் அரங்கில் இவ்விருது வழங்கும் விழா இடம்பெற்றது.