உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக 100 வெள்ளி சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
2022 வரவுசெலவுத் திட்டத்தில் எல்லா சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் $200 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூர் குடும்பங்கள் கூடுதலாக $100, அதாவது மொத்தம் $300 மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெறும். அப்பற்றுச்சீட்டுகளைப் பேரங்காடிகள், குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைகள், உணவங்காடி நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கும்.

