கொரோனா: சிங்கப்பூரில் மூன்றாவது மரணம்

கொரோனா: சிங்கப்பூரில் மூன்றாவது மரணம்

1 mins read
790a541b-8f93-4e6c-801b-c97f1ddffc25
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீசிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது சிங்கப்பூர் ஆடவர் இன்று காலமானார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 எனும் கொரோனா கிருமித்தொற்றுக்கு சிங்கப்பூரில் மூன்றாவது நபர் பலியாகியுள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 70 வயது சிங்கப்பூர் ஆடவர் இன்று (மார்ச் 29) நண்பகல் 12.12க்கு காலமானார் என்று சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.அவர் ஏற்கெனெவே உயர் ரத்த அழுத்தத்தாலும் உயர் ரத்தக் கொழுப்பாலும் (Hyperlipidemia) பாதிக்கப்பட்டிருந்தார்.

அந்த ஆடவர் பிப்ரவரி 29ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது மார்ச் 2ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

அன்று முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மொத்தம் 27 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற அவஎ இன்று நண்பகல் காலமானார்.

இது கொரோனா கிருமித்தொற்றல் சிங்கப்பூரில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது மரணம்.

இதற்கு முன்னர் மார்ச் 21ஆம் தேதி 75 வயது சிங்கப்பூர் மூதாட்டியும் இந்தோனீசியாவைச் சேர்ந்த 64 வயது ஆடவரும் கொரோனா கிருமித்தொற்றுக்கு பலியாகினர். அந்த மூதாட்டிக்கு நீண்ட கால இதய நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. இறந்த இந்தோனீசிய ஆடவருக்கு இத்ய நோய் இருந்தது.