நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் தங்களது ஓய்வுக்காலத்திற்கு அதிகம் சேமிக்க உதவும் வகையில், மத்திய சேம நிதி சந்தாவிற்கான மாதாந்திர ஊதிய வரம்பு உயர்த்தப்படவுள்ளது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
ஊதியங்களும் அதிகரித்துவரும் நிலையில், வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மசே நிதி மாதாந்திர ஊதிய வரம்பு 6,000 வெள்ளியில் இருந்து படிப்படியாக 8,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும் என்று நிதியமைச்சருமான வோங், நாடாளுமன்றத்தில் இன்று (14-02-2023) வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
நிறுவனங்களும் ஊழியர்களும் இந்த மாற்றத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் வகையில், இவ்வாண்டு செப்டம்பரில் இருந்து கட்டம் கட்டமாக இந்த உயர்வு நடப்பிற்கு வரும்.
அதே நேரத்தில், இப்போது $102,000ஆக இருக்கும் மசே நிதி வருடாந்திர ஊதிய வரம்பில் மாற்றமில்லை.

