சென்ற ஆண்டு உலகம் முழுவதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்த நிலையில், இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 0.5% முதல் 2.5% என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று (14-02-2023) வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிட்டியது, கொவிட்-19 ஆதரவுத் தொகுப்புகளுக்கு நிதியளிக்கக் கைகொடுத்தது என்று திரு வோங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு கொவிட்-19 ஆதரவுத் தொகுப்புகளுக்காக $3.5 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டது.
அரசாங்கம் இன்னமும் கடுமையான நிதி நிலைமையை எதிர்கொண்டு வருவதால் கடந்தகாலச் சேமிப்பு நிதியிலிருந்து பெற்ற $3.1 பில்லியனை திரும்ப அந்நிதிக்குச் செலுத்த வாய்ப்பில்லை என்று நிதியமைச்சருமான வோங் குறிப்பிட்டார்.

