இந்தியாவின் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் 2023 விருதை வென்றுள்ளது.
நெட்பிளிக்ஸில் வெளியான அந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கினார்.
தமிழகத்தின் முதுமலைப் பகுதியில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' படமாக்கப்பட்டது. யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதைதான் இந்த ஆவணப்படம்.
ஆஸ்கார் விருதை இந்திய நாட்டுக்கு அர்பணிப்பதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் கூறினார். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் பழங்குடி மக்களுக்கு உண்டான மரியாதை தொடர்பாகவும் அவர் பேசினார்.
'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டுக்கூத்து' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் வெற்றிபெற்றது..
95வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இன்று (மார்ச் 13) நடந்தது.

