தானியக்க குடிநுழைவு இயந்திரங்கள் அறிமுகம்

தானியக்க குடிநுழைவு இயந்திரங்கள் அறிமுகம்

2 mins read
7243ee06-9e55-4662-a30f-62b09868d5b1
-

குடும்­பங்­க­ளுக்­கும் சக்­க­ர­நாற்­காலி பயன்­ப­டுத்­து­வோ­ருக்­கும் வச­தி­யாக சாங்­கி விமான நிலை­யத்­தில் தானி­யக்க குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

குழுவாகப் பய­ணம் மேற்­கொள்­வோர் ஒன்­றாக குடி­நு­ழை­வுச் செயல்­மு­றை­களை செய்­து­மு­டிக்க தானி­யக்க இயந்­தி­ரங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள முதல் நாடு எனும் பெருமை சிங்­கப்­பூ­ரைச் சேரும்.

முனை­யம் ஒன்­றின் புறப்­பாடு பகு­தி­யி­லும் முனை­யம் இரண்­டின் வருகை மற்­றும் புறப்­பாடு பகு­திக­ளி­லும் இந்­தச் சிறப்பு உதவித் தட­ங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றை சிங்­கப்­பூ­ரர்­கள், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால குடி­நு­ழைவு அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள் ஆகி­யோர் பயன்­ப­டுத்­த­லாம்.

"நான்கு பேர் வரை­யி­லான உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட குடும்­பங்­கள், சக்­க­ர­நாற்காலி பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் ஆகி­யோர் இந்­தச் சிறப்பு உதவி தடத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்," என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­கள் ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

இந்தப் புதிய முறையை அறி­மு­கப்­ப­டுத்தும் முன்பு குடும்­பங்­களும் சக்­க­ர­நாற்­கா­லி­யைப் பயன்­

ப­டுத்­து­வோ­ரும் அதி­கா­ரி­கள் இருக்­கும் முனை­யங்­க­ளுக்­குச் சென்று தங்­கள் கடப்­பி­தழ்­க­ளைக் காட்ட வேண்டி இருந்தது.

புதிய தடங்­களில், பய­ணி­கள் தங்­கள் கடப்­பி­தழ்களை ஸ்கேன் செய்­ய­லாம். இயந்­தி­ரங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள கேம­ராக்­களும் பயோ­மெட்­ரிக் ஊடு­ரு­வல் கரு­வி­களும் பய­ணி­க­ளின் கரு­வி­ழி­க­ளை­யும் முகங்­க­ளை­யும் ஸ்கேன் செய்து குடி­நு­ழை­வுச் செயல்­மு­றை­களை செய்து முடிக்­கும்.

கரு­விழி, முகம் ஆகி­ய­வற்றை ஸ்கேன் செய்ய முடி­யா­தோ­ருக்கு அவர்­க­ளது விரல் ரேகை பயன்ப­டுத்­தப்­படும்.

புதிய தடங்­களில் ஆறு வய­துக்­கும் குறை­வான சிறு­வர்­க­ளுக்­குக் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­கள் ஆணைய அதிகா­ரி­கள் உத­வு­வர்.

இந்­தத் தானி­யக்க குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­களை மற்ற முனை­யங்­களில் படிப்­ப­டி­யாக பொருத்த இருப்­ப­தாக ஆணையம் கூறி­யது.

நில­வழி, கடல்­வழி பய­ணி­க­ளுக்­கான சோத­னைச்­சா­வ­டி­க­ளி­லும் இந்த இயந்­தி­ரங்­கள் பொருத்­தப்­படும் என்று தெரிவிக்­கப்­பட்­டது.

தகு­தி­பெ­றும் வெளி­நாட்­டுப்பய­ணி­க­ளுக்­கான தானி­யக்க குடி­நு­ழைவு முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து நீட்­டிக்­கப்­படும்.

இந்­தப் புதிய தடங்­க­ளைத் தொடங்­கு­வ­தற்கு முன்பு உள்­துறை அமைச்சு குழு அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்­பு­ட­னும் சாங்கி விமான நிலைய குழு­மத்­து­ட­னும் இணைந்து வடி­வ­மைப்­புச் சிந்­தனை பயி­ல­ரங்கு ­க­ளை­யும் மெய்­நி­கர் பயிற்­சி­க­ளை­யும் நடத்­தி­ய­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­க­ளின் அக­லம், கடப்­பி­தழை வைக்­கும் இடம், பயோ­மெட்­ரிக் ஊடு­ருவல் கரு­வி­கள் இருக்­கும் இடம் ஆகி­யவை தொடர்­பாக சக்­க­ர­நாற்­காலி பயன்­ப­டுத்­து­வோ­ரி­டம் அவர்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­கள் பற்றி கருத்து சேக­ரிக்­கப்­பட்­டது.

சேக­ரித்த கருத்­து­க­ளைப் பயன்ப­டுத்தி புதிய தடங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவற்­றைத் தொடர்ந்து மேம்படுத்த இருப்­ப­தா­க­வும் ஆணை­யம் கூறி­யது.

"சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்டுப் பயணிகள் முத­லில் சாங்கி விமான நிலை­யத்­தைத்­தான் பார்க்­கி­றார்­கள். அந்த அனு­ப­வம் அவர்­க­ளுக்கு இனி­மை­யா­ன­தாக இருந்­தால் சிங்­கப்­பூ­ரைப் பற்­றிய அவர்­க­ளது எண்ணம் நல்­ல­தாக இருக்கும். சிங்­கப்­பூ­ரில் அவர்­கள் மேற்­கொள்­ளும் பயண அனு­ப­வம் மகிழ்ச்சியா­ன­தாக இருக்­கும்," என்று நீ ஆன் பலது­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை மூத்த விரி­வு­ரை­யா­ளர் டாக்­டர் மைக்­கல் சியாம் தெரிவித்தார்.

"புதிய தடங்­கள் சக்­க­ர­நாற்­காலி பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு ஏது­வா­ன­தாக இருக்­கும். அவற்றை அவர்­கள் யாரு­டைய உத­வி­யும் இல்­லா­மல் பயன்­ப­டுத்­த­லாம். அது­மட்­டு­மல்­லாது, அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்­கும் அது சௌக­ரி­யத்­தைத்­த­ரும்," என்று உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­குச் சேவை வழங்­கும் எஸ்­பிடி நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி திரு அபி­மன்யு பால் தெரி­வித்­தார்.