சிறந்த பொதுப் போக்குவரத்து: அடுத்தடுத்த நிலைகளில் சிங்கப்பூர், ஹாங்காங்

சிறந்த பொதுப் போக்குவரத்து: அடுத்தடுத்த நிலைகளில் சிங்கப்பூர், ஹாங்காங்

1 mins read
17c1b08a-1752-4e22-8508-999f2d920e15
பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது மும்பை மாநகரம். படம்: பியாண்ட் பாம்பே -

உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட 19 நகரங்களின் பட்டியலை 'டைம் அவுட்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் 19வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் வணிகத் தலைநகராக அறியப்படும் மும்பை மாநகரம்.

இதுகுறித்து மொத்தம் 50 நகரங்களில் 20,000க்கும் மேற்பட்டோரிடம் 'டைம் அவுட்' நிறுவனம் கருத்தாய்வு நடத்தியது.

உலகில் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட நகரம் எனும் சிறப்பைப் பெற்றது ஜெர்மானியத் தலைநகரான பெர்லின். உள்ளூர்வாசிகளில் 97 விழுக்காட்டினர் அந்நகரின் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பாராட்டினர்.

பிராக் (செக் குடியரசு), தோக்கியோ (ஜப்பான்), கோப்பன்ஹேகன் (டென்மார்க்), ஸ்டாக்ஹோம் (சுவீடன்) ஆகியவை அடுத்த நான்கு இடங்களைப் பிடித்தன.

சிங்கப்பூர் ஆறாமிடத்தையும் ஹாங்காங் ஏழாமிடத்தையும் பிடித்துள்ளன.

பட்டியலின் முதல் பத்து இடங்களிலும் ஆசிய, ஐரோப்பிய நகரங்களே இடம்பெற்றுள்ளன.