தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவாவுக்கு வில்லனாக லோகேஷ்

1 mins read
5030eb1c-9996-4afe-ba9e-2d4d7538b590
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியுடன் சேரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். - படம்: குமுதம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கவிருந்த புறநானூறு திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ‘போட்டோஷுட்’ முடிந்துவிட்டதாகவும் அதில் லோகேஷ் கனகராஜ்ஜும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகவுள்ள புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்