அடுத்த மாதத் தொடக்கத்திலிருந்து மலேசியாவில் கொவிட்-19 விதிகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதற்கான தேவை நீக்கப்படுவது, கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்படுவது உள்ளிட்டவை தளர்வுகளில் அடங்கும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் கடைத்தொகுதிகள் போன்ற இடங்களுக்குள் நுழைய முடியும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் புதன்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்துள்ளார்.
மேலும், பயணத்துக்கு முந்தைய கிருமித்தொற்றுப் பரிசோதனைகளுக்கும் மலேசியா வந்திறங்கியவுடன் செய்யப்படவேண்டிய பரிசோதனைகளுக்கும் இனி அவசியம் இராது.
உள்புறங்களிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் என்றார் அவர்.

