மார்சிலிங்கில் தீயிட்டு கொளுத்தப்பட்ட ஆடவர் மாண்டார்; கொலை முயற்சி கொலைக் குற்றம் ஆனது

2 mins read
a8f14957-f067-4bc5-9b3e-9b5797b10afa
ஹெங் ஹோக் மினிமார்ட் எனும் கடைக்கு வெளியே சம்பவம் நடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் உள்ள கடைக்கு வெளியே பெட்­ரோல் ஊற்­றப்­பட்டு கொளுத்தப்பட்ட ஆட­வர் உயிர் இழந்­து­விட்­டார்.

அவர்­மீது பெட்­ரோலை ஊற்­றி­ய­வ­ருக்கு எதி­ராக கொலை முயற்சி குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

அது தற்­போது கொலைக் குற்­றச் சாட்­டாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

65 வயது டே கெங் ஹோக், 37 வயது டான் கிம் ஹீ மீது தீயை வேக­மா­கப் பர­வச் செய்­யும் திர­வத்தை ஊற்­றி­னார் என்று நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

மார்­சி­லிங் கிரெ­சன்ட் புளோக் 210 அருகே கடந்த டிசம்­பர் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சம்­ப­வம் நடந்­தது.

ஹெங் ஹோக் மினி­மார்ட் எனும் கடைக்கு வெளியே டே, திரு டான் மீது திர­வத்தை ஊற்றி, லைட்­ட­ரைக் கொண்டு தீயைப் பற்ற வைத்­தார் என்று கூறப்­பட்­டுள்­ளது.

திரு டான் எப்­போது உயிர் இழந்­தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

சம்­ப­வம் நடந்த ஹெங் ஹோக் மினி­மார்ட்­டுக்கு அவர் தான் உரி­மை­யா­ளர் என்று தெரிய வந்­துள்­ளது.

ஆக்ரா எனப்­படும் கணக்­கியல் , நிறுவனக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தில் அவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட டே விஷிங் வெல் பியூட்டி பார்­லர் எனும் அழகு நிலை­யத்­தின் உரி­மை­யா­ளர் ஆவார்.

அந்த நிலை­யம் பென்­கூ­லன் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்­ளது.

சம்­ப­வம் நடந்­த­போது திரு டான் தீக்­கா­யங்­க­ளு­டன் காணப்­பட்­ட­தா­க­வும் அவர் கூ டெக் பூவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியிருந்தது.

திரு டான் சுய­நி­னை­வு­டன் இருந்தார் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.

டே, சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.