ஒருங்கிணைந்த உல்லாசத்தளமான மரினா பே சேண்ட்ஸ் $4.5 பில்லியன் செலவில் விரிவாக்கம் காணவுள்ளது.
இது தொடர்பான மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடன் கையெழுத்தானது.
ஆயினும், விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் இரண்டாம் முறையாகத் தள்ளிப்போடப்பட்டுள்ளன. முன்னதாக, கட்டுமானப் பணிகளை ஓராண்டிற்குத் தள்ளிவைப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரினா பே சேண்ட்ஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்க கழகம் அனுமதி அளித்துள்ளது என்று மரினா பே சேண்ட்சின் உரிமையாளரான லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் கூறியிருக்கிறது.
ஆயிரம் அறைகளைக் கொண்ட ஹோட்டல் கோபுரம், 15,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட நேரடி நிகழ்வரங்கு உள்ளிட்ட வசதிகளைச் சேர்க்கவிருப்பதாக சென்ற 2019ஆம் ஆண்டில் மரினா பே சேண்ட்ஸ் அறிவித்திருந்தது.
விரிவாக்கப் பணிகளை 2028 ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


