இணையம் வழி நடக்கும் மோசடிகள், சூதாட்டம், பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பொருள்கள் விநியோகம், வெளிநாட்டுத் தலையீடு போன்ற ஆபத்துகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றை தடுக்க உள்துறை அமைச்சு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என உள்துறை அமைச்சின் இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
உடல்ரீதியாக ஏற்படும் நேரடி ஆபத்துகள் போலவே இணையம்வழி ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் கையாள வேண்டும் என அமைச்சர் கூறினார்.
இணையவழிக் குற்றச்செயல் தீங்கு எனும் புதிய சட்டம் இவ்வாண்டு பிற்பாதியில் அறிமுகப்படுத்தப்படும்.
இணையம் வழி ஏற்படும் ஆபத்துகளை ஊக்குவிக்கும் அனைத்து விதமான தகவல்களை தடுக்கவும் அகற்றவும் புதிய சட்டத்தில் அனுமதி உண்டு.