சளிக்காய்ச்சல் இருமல் மருந்துகள் கடைகளில் கிடைப்பதற்கு சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது

சளிக்காய்ச்சல் இருமல் மருந்துகள் கடைகளில் கிடைப்பதற்கு சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது

1 mins read
824227d2-78bd-4af6-8586-4f52096f84c0
கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ் -

சளிக்காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்ய சில்லறை வர்த்தகக் கடைகளுடனும் சில்லறை வர்த்தக மருந்தகங்களுடனும் சுகாதார அமைச்சு இணைந்து பணியாற்றி வருகிறது.

சில்லறைக் கடைகளில் வாங்கக்கூடிய சளிக் காய்ச்சல் மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது தனக்குத் தெரியும் என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை (டிச. 21) அன்று கூறியது.

நிலைமையைத் தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.

இந்தச் சில்லறைக் கடைகளில் ஒவ்வொரு வகை மருந்திலும் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.

பெரிய நிறுவனங்கள் தயாரிக்காத பொதுவகை மருந்துகளும் அவற்றில் அடங்கும்.

இந்த பொதுவகை மருந்துகள், பெருநிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஈடான செயல்திறன் கொண்டவை என்றது சுகாதார அமைச்சு.

தாங்கள் விரும்பும் நிறுவனத்தின் தயாரிப்பு கிடைக்காவிட்டால், வேறு நிறுவனம் தயாரித்த மருந்தை வாங்கும்படி பொதுமக்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறியது.

மருந்துகள் வீணாவதைத் தடுக்க, தங்களுக்கு மட்டும் தேவையான எண்ணிக்கையில் மருந்துகளை வாங்கும்படி அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியது.

சிங்கப்பூரில் வசிக்கும் சீன நாட்டவர் சளிக் காய்ச்சல் மருந்துகளை வாங்கி, அஞ்சல்வழி அவற்றை தாய்நாட்டு அனுப்பி வருவதாக லியன்ஹ சாவ்பாவ் சென்ற வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.

சீனாவில் கொவிட்-19 தொற்று பரவி வருவதால் அங்கு சளி, காய்ச்சல், இருமல் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.