அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12) காலை சிலர் சுடப்பட்டதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரூக்லின் பகுதியின் சன்செட் பார்க்கில் உள்ள அந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் புகை வெளியானதாகத் தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
அங்கு பலர் சுடப்பட்டுக் கிடந்ததையும் வெடிக்கச் செய்யப்படாத பல்வேறு வெடிகுண்டு சாதனங்கள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் சுடப்பட்டதாக சிஎன்என் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஆரஞ்சு நிற மேற்சட்டை அணிந்திருந்த கறுப்பினத்த ஆடவர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.