டாக்சிகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டாக்சிகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
c50bc1d8-8b89-49f4-b959-36e9f72985e6
இதற்கு முன்பு கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகளால், டெக்சிகளில் இரு பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது. அப்படி கூடுதலானோர் இருந்தால் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியிருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தற்போது டாக்சிகளிலும் தனியார் வாடகை வண்டிகளிலும் நடப்பில் உள்ள இரண்டு பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு வரும் திங்கள் (ஜூன் 14 ஆம் தேதி) அன்று தளர்த்தப்படும்.

இதனை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று அறிவித்தது.

வர்த்தக கூட்டு சவாரி (carpooling) சேவைகளும் தொடங்கலாம் என்று அது தனது அறிக்கையில் தகவல் வெளியிட்டிருந்தது.

எல்லா பயணிகளும் ஓட்டுநர்களும் பயணங்களில் ஈடுபடும்போது எல்லா நேரத்திலும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

முகக் கவசம் அணியாத பயணிகளை டெக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

உரிமம் பெற்ற GrabHitch, RydePool போன்ற தனியார் வாடகை வாகன சேவைகள் திங்கள் முதல் தொடங்கலாம்.

ஆனால் டெலிகிராம் செயல் வழியாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டு சவாரி (carpooling) சேவைகள் சட்டவிரோதமாக கருதப்படும்.

கட்டணம் இல்லாத நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள் தொடர்பான கூட்டு சவாரி சேவைகள் அனுமதிக்கப்படுகிறது ஆனால் அதிகபட்சமாக ஐந்து பேர் வரை மட்டுமே ஒன்றாக பயணம் செய்ய முடியும்.

தொடர்புகளின் தடங்களை கண்டறிய, பயணிகளும் ஓட்டுநர்களும் தங்கள் டிரேஸ்டுகெதர் கருவிகள் அல்லது செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.