கரகம் சோடிப்புக் கலை காக்கும் கலைஞருக்கு அங்கீகாரம்

சிங்கப்பூரில் கலாசாரங்களைக் கட்டிக்காத்து அந்தத் தேர்ச்சியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசென்று சாதனை படைத்துள்ள இரண்டு பேரும் இரு அமைப்புகளும் வரும் செவ்வாய்க்கிழமை அங்கீகரித்து பாராட்டப்படவிருக்கிறார்கள். 

அவர்களுக்குத் கலாசார, மரபுடைமை விருது வழங்கி தேசிய மரபுடைமைக் கழகம் சிறப்பிக்கும்.

சிங்கப்பூரில் ஆர்க்கிட் மலர் வளர்ப்பில் 60 ஆண்டு காலத்திற்கும் அதிக அனுபவம் கொண்ட சையது யூசூப் அல்சாகோஃப், 88, கரகக் கலைஞர் பாலகிருஷ்ணன் ராமசாமி ஆகியோரும் குனோங் சயாங் சங்கம், சிங்கப்பூர் வூஷூ கடல்நாக, சிங்க நடனக் கூட்டமைப்பு என்ற இரு அமைப்புகளும் சிறப்பிக்கப்பட இருக்கின்றன. 

திரு பாலகிருஷ்ணன் ராமசாமி, 67, தமது 18 வயது முதல் கரகத்தைச் சோடிப்பதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். 

இந்துக் கடவுளான மாரியம்மனின் சின்னமாக நம்பப்படும் கரகம் மலர்களாலும் இதர மங்கலப் பொருள்களாலும் அலங்கரிக்கப்படும். அந்தக் கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு தீமிதி போன்ற சமய நிகழ்ச்சிகளில் பூசாரி கரகாட்டம் ஆடுவார். 

இந்தக் கலையில் 30 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் கொண்டவர் திரு பாலகிருஷ்ணன். இவர், இந்தக் கலையை சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த இளம் தொண்டூழியர்களுக்குப் போதித்து இருக்கிறார். 

இந்தப் பாரம்பரியம் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த இவர் பயிலரங்குகளையும் நடத்தி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!