கொவிட்-19 தடுப்பூசியை இனி தேர்ந்தெடுக்கலாம்

1 mins read
1a2d402f-ec8b-4080-8353-4970073368f7
தீவில் உள்ள 11 தடுப்பூசி நிலையங்களில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி மருந்து கிடைக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று தடுப்பூசியை தெரிவு செய்ய விரும்புவோர் சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தை நாடலாம்.

அதில் எல்லா கொவிட்-19 தடுப்பூசி நிலையங்களின் விவரங்களும் அங்கு கிடைக்கக்கூடிய கொவிட்-19 கிருமித்தொற்று தடுப்பூசிகளின் விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி, அவர்கள் ஃபைசர்-பாயோன்டெக் அல்லது மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி மருந்து எடுப்பது குறித்து தெரிவு செய்யலாம்.

தற்போது செயல்படும் 38 தடுப்பூசி நிலையங்களில், 11 நிலையங்களில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி மருந்து கிடைக்கும்.

மற்ற நிலையங்கள் ஃபைசர்-பாயோன்டெக் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை பயன்படுத்துகின்றன.

எந்த தடுப்பூசி நிலையம் அல்லது பலதுறை மருந்தகத்தில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள விரும்புகிறீர்கள் குறித்து மக்கள் இனி தெரிவு செய்யலாம்.

ஆனால் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கான தேவை அதிகம் இருக்க, சில நிலையங்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையில்தான் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இருக்கும்.