சிங்கப்பூரில் உணவு விலைகள் தொடர்பாகக் கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) இன்று திங்கட்கிழமை (13-03-2023) வெளியிட்ட அறிக்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.
உணவங்காடி நிலையங்கள் (hawker centre), கோப்பித்தியாம், உணவுக்கடைத் தொகுதிகள் (foodcourt) கடந்த 2022 செப்டம்பர்-நவம்பர், 2023 ஜனவரி-பிப்ரவரி காலகட்டங்களில் உணவுவகைகளின் விலைகள் குறித்துத் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உணவு நிலையங்களில் விற்கும் கோப்பி-ஓ, வான்டன் நூடல்ஸ், 'பீஹூன் செட்' அல்லது 'சிக்கன் சாப்' போன்ற 18 உணவு, பானங்களின் விலைகள் திரட்டப்பட்டு ஆராயப்பட்டன.
ஆய்வாளர்கள் 26 குடியிருப்பு வட்டாரங்களில் 82 உணவங்காடி நிலையங்கள், 101 உணவுக்கடைத் தொகுதிகள், 636 கோப்பித்தியாம் என மொத்தம் 829 உணவு விற்பனை நிலையங்களுக்குச் சென்று தரவுகளைத் திரட்டினர்.
அதனடிப்படையில் கீழுள்ள முடிவுகள் பெறப்பட்டன:
• மலிவுவிலை காலை உணவு ($2): புக்கிட் பாஞ்சாங், தோ பாயோ, ஜூரோங் வெஸ்ட் (பிரேக்ஃபாஸ்ட் செட்); தோ பாயோ (கோப்பி-ஓ, நாசி லேமாக் சேர்ந்து)
• மலிவுவிலை நண்பகல் உணவு ($2): தோ பாயோ (கோப்பி-ஓ, நாசி லேமாக் சேர்ந்து), செம்பவாங் (குளிர்பானம், சைவ பீஹூன் சேர்ந்து)
• மலிவுவிலை இரவு உணவு ($2.80): ஜூரோங் ஈஸ்ட் (கோப்பி-ஓ, ஃபிஷ்பால் நூடல்ஸ் சேர்ந்து)
• செலவுமிக்க காலை உணவு ($9.50): பீஷான் (காப்பி, வான்டன் நூடல்ஸ் சேர்ந்து)
• செலவுமிக்க நண்பகல், இரவு உணவு ($14.90): குவீன்ஸ்டவுன் (ஐஸ் மைலோ, கோழி பிரியாணி சேர்ந்து), தெம்பனிஸ் (ஐஸ் மைலோ, சிக்கன் பிரியாணி அல்லது சிக்கன் சாப் சேர்ந்து)