ஆசியாவின் முதலாவது முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை

மும்பை: ஆசியாவிலேயே முதன்முறையாக முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மும்பை குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 16 மணி நேரமாக அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, நோயாளிக்கு இருவேறு கைகளைப் பொருத்தினர்.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரைச் சேர்ந்த பிரேம ராம் என்ற ஆடவருக்கு மாற்றுக் கைகள் பொருத்தப்பட்டன.

கடந்த 12 ஆண்டுகளுக்குமுன் பிரேம ராம் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது தற்செயலாக மின்கம்பத்தைத் தொட, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் கடுமையாகக் காயமுற்ற அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் கைகளை வெட்டியே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனையடுத்து, ஜெய்ப்பூர் மருத்துவமனையில் பிரேம ராமின் கைகள் தோளிலிருந்து முழுவதுமாக வெட்டப்பட்டன.

செயற்கைக் கைகளைப் பெற இவரின் குடும்பத்தினர் முயன்றனர். ஆனாலும், அவற்றைக் கொண்டு எவ்வேலையையும் செய்ய முடியாது.

ஆனாலும், பிரேம ராம் நம்பிக்கை இழக்கவில்லை. மும்பை குளோபல் மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதை அறிந்து, 2022ஆம் ஆண்டில் அதற்குத் தம் பெயரைப் பதிவுசெய்தார்.

இந்நிலையில், சென்ற மாதம் 9ஆம் தேதி அம்மருத்துவமனையில் இவருக்குக் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, இம்மாதம் 9ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அடுத்த 18-24 மாதங்களுக்கு இவர் இயன் சிகிச்சையைத் (பிசியோதெரபி) தொடர வேண்டும். 18 மாதங்களில் இவரது கை ஓரளவு செயல்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக ‘மிட் டே’ செய்தி தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!