பண வெகுமதி ஊக்குவிப்புத் திட்டம் மீண்டும் தொடக்கம்

காலை உச்ச நேரத்தின்போது வடகிழக்கு ரயில் வழித்தடத்தில் இருந்து விரைவு பேருந்துச் சேவைக்கு மாறிச் செல்லும் பயணிகளுக்கு ரொக்க வெகுமதி அளிக்கக்கூடிய ஓர் ஊக்குவிப்புத் திட்டம் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது. 

‘விவேகப் பயணத் திட்டம்’ என்று குறிப்பிடப்படும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. 

சிங்கப்பூரின் வடகிழக்கு வட்டாரத்திற்குச் சேவையாற்றும் 654, 660, 666, 671, 672 ஆகிய ஐந்து நேரடி நகரப் பேருந்து சேவைகளை அத்திட்டம் உள்ளடக்கும். 

பொங்கோல், செங்காங், புவாங்கோக் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் பயணிகள், மெக்பர்சன், பாய லேபார், மரின் பரேட் ஆகியவற்றில் உள்ள வேலை இடங்களுக்கு காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை வழியாகச் செல்ல உதவும் பேருந்து சேவை எண் 43e ஏற்கெனவே திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இருப்பதால், பொங்கோல்,

செங்காங், புவாங்கோக், ஹவ்காங்  ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிங்கப்பூரின் கிழக்கு, மத்திய பகுதிகளில் உள்ள வேலையிடங்களுக்கு வசதியா ச் சென்று வரலாம். 
நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. இந்த ஆறு விரைவுப் பேருந்துச் சேவைகளைக் காலக்கிரம முறைப்படி பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய பேருந்துக் கட்டணத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை விவேகப் பயணத் திட்டத்தின் மூலம் ஈட்டக்கூடிய புள்ளிகளைக் கொண்டு ஈடுசெய்யலாம். 

வழக்கமான பேருந்து, ரயில் கட்டணங்களில் பெரியவர்கள் செல்வதற்கு உரிய கட்டணத்தைவிட விரைவுப் பேருந்தில் 60 காசு அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டும். 

பயணத் தொலைவைப் பொறுத்து கட்டணம் விதிக்கப்படுகிறது. விவேகப் பயணத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள வேண்டுமானால் ‘டிரான்சிட்லிங்க் சிம்ப்ளிகோ வெப்’ என்ற இணைய வாசலில் அல்லது ‘டிஎல் சிம்ப்ளிகோ’ என்ற செயலியில் பயணிகள் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும். 

இதற்குச் சில நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். 

பதிந்ததும் பயணிகள் 43e, 654, 660, 666, 671 அல்லது 672 ஆகிய பேருந்து சேவைகளில் வார நாள்களில் காலை 7 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் மாறிச் சென்று தாய் செங், மெக்பர்சன், பாய லேபார், பார்க்வே பரேட், ஷென்டன் வே அல்லது மரினா பொலிவார்ட் ஆகியவற்றில் உள்ள இடங்களில் இறங்கிக்கொண்டால் ஒரு பேருந்துப் பயணத்திற்கு 150 புள்ளிகள் கிடைக்கும். 

அப்படி 500 புள்ளிகள் சேர்ந்ததும் அவற்றை ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம். 500 புள்ளிகளுக்கு $5 கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!