வெளிநாட்டு ஊழியர் வரவால் 2022ல் வேலைகள் பெருகின

சிங்கப்பூரில் வேலை நிலவரம்  2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022ல் பெரிதும் மேம்பட்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 231,700 கூடுதலான ஊழியர்கள் வேலைகளில் சேர்ந்தனர். அது  2019ல், பெருந்தொற்றுக்கு முன்புஇருந்த நிலவரத்தைவிட மூன்று விழுக்காடு அதிகம் ஆகும்.  

ஆண்டிறுதியில் வேலைநீக்கம் அதிகரித்தபோதும்  சென்ற ஆண்டு முழுவதும் வேலையின்மை விகிதம் நிலையாகவும் வேலைநீக்கம் குறைவாகவும் இருந்ததாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. 2022க்கான தனது முன்னோடி வேலை நிலவர அறிக்கையை அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) வெளியிட்டது.

கடந்த ஆண்டு புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டவர் களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து, அதிகமானவர்கள் இங்கு வேலையில் சேர்க்கப்பட்டனர். 

அதே நேரம், உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையும் கூடியது. ஆனால் 2021ஆம் ஆண்டைவிட குறைவான விகிதத்தில் அந்த வளர்ச்சி இருந்தது. நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு, சமூகம், தனிப்பட்ட சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அந்தப் புதிய வேலைகள் பெரும்பாலும் இருந்தன.    

2021ல் 2.7 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் 2022ல் 2.1 விழுக்காடாகக் குறைந்தது. பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த 1.9 விழுக்காடு வேலையின்மை விகிதத்தைவிட இது சற்றே அதிகமாகும். 

அத்துடன், சென்ற ஆண்டு 6,450 வேலை இழப்புகள் ஏற்பட்டன. இது முந்தைய மூன்று ஆண்டுகளைவிடக் குறைவாகும். வேலை இழப்புகளின் எண்ணிக்கை 2021ல் 8,020ஆகவும் 2019ல் 10,690ஆகவும் இருந்தது.

“சிங்கப்பூர் பொருளியல் மீட்சி அடைந்த நிலையில், திறனாளர்களை ஈர்க்க அதிகமான முதலாளிகள் கூடுதல் சம்பளம் வழங்க முன்வந்தனர். அதனால் வேலை தேடுவோருக்கான வேலை விகிதம் அதிகரித்தது.  

“வேலையில்லாத ஒவ்வொரு நபருக்கும் இரண்டு காலி வேலையிடங்கள் இருந்தன,” என்று அடேக்கோ எனும் மனித வள ஆலோசனை நிறுவனத்தின் சிங்கப்பூர் மேலாளர் பெத்துல் கெங்க் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.  

காலாண்டு அடிப்படையில் பார்த்தால், வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக அதிகரித்தது. உள்ளூர் ஊழியர் அணியில் 47,400 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. 

இவ்வேளையில். சென்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை சுமார் 3,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். 

ஆனால் முந்தைய மூன்று காலாண்டுகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 800க்கும் 1,300க்கும் இடைப்பட்டிருந்தது.

மின்னியல், தகவல் தொழில்நுட்பத் துறை, ஒட்டுமொத்த வர்த்தகத் துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வர்த்தக மறுசீரமைப்பால் பல வேலைகள் குறைக்கப்பட்டன. 

இவ்வாண்டு வேலை நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக மனிதவள அமைச்சு கூறியது. நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளதை அமைச்சு நடத்திய கருத்தாய்வு எடுத்துரைத்தது.  

டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் கலந்துகொண்ட 64.6 விழுக்காட்டு நிறுவனங்கள் அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிட்டன. 

ஆனால் வேலைச்சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் வேகம் இழக்கலாம் என்றும் அண்மைய வேலை இழப்புகளால் வேலையின்மை விகிதம் உயரக்கூடும் என்றும் அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!