ஹொக்கைடோ: ஜப்பானின் ஹொக்கைடோவில் நேற்று செவ்வாய்க்கிழமை (10-01-2023) காலை நிகழ்ந்த விபத்தில் 41 வயது சிங்கப்பூர் பெண்ணும் அவரது நான்கு மாத மகளும் உயிரிழந்தனர்.
கமிஃபுரனோ நகரில் பனியால் மூடப்பட்டிருந்த சாலையில் அவர்கள் சென்ற கார், பெரிய லாரிமீது மோதி விபத்துக்குள்ளானதாக லியான்ஹ சாவ்பாவ் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் அப்பெண்ணின் 44 வயது கணவரும் அவர்களின் மூத்த மகளும் காயமுற்றனர் என்று ஜப்பானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது என்று ஹொக்கைடோ காவல்துறை தெரிவித்ததாக சாவ்பாவ் செய்தி கூறுகிறது.

