பயங்கரவாத மிரட்டலுக்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் - அமைச்சர் விவியன்

பயங்கரவாத மிரட்டலுக்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் - அமைச்சர் விவியன்

1 mins read
0f9955a6-61e1-42f3-983d-3c132aba9054
-

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்கு தலில் தேவையற்ற உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இது, கடைசி சம்பவமாகவும் அமைந்து விடாது என்று வெளியுறவு அமைச் சர் விவியன் பாலகிருஷ் ணன் நேற்று எச்சரித்தார். இதனால்தான் இந்த வட்டாரத் தில் பயங்கரவாத மிரட்டலுக்கு எதிராக சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா ஆகியவற்றுக்கு இடை யே கூட்டு ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று அவர் வலி யுறுத்தினார்.

"முயற்சிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு அரசாங்கங் களும் உறுதி கொண்டுள்ளன," என்றார் டாக்டர் விவியன். பயங்கரவாதத்தை எதிர்கொள் ளல், தீவிரவாதப் போக்கு, மத்திய கிழக்கு வட்டாரங்களுக்குச் சென்று திரும்பும் இளையர்களின் பயணத்தைச் சமாளித்தல் போன்ற வை முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார். நேற்று முன்தினம் மிகவும் பரபரப்பான இஸ்தான்புல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் போராளி ஒருவன் தன்னைத் தானே வெடிக்கச் செய்ததில் பத்து பேர் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் பெரும் பாலானவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடடோவைச் சந்தித்த அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடம்). இவ்வாண்டு மத்தியில் அதிபர் ஜோக்கோ விடடோவும் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்திக்கவிருக்கின்றனர் என்று தமது பயணத்தின் முடிவில் டாக்டர் விவியன் சொன்னார். படம்: டாடான் சியூஃபிலானா