வேற்றுமைகளை விடுத்து ஒற்றுமையில் கவனம் தேவை

வேற்றுமைகளை விடுத்து ஒற்றுமையில் கவனம் தேவை

1 mins read

பல இனம், சம­யங்களைச் சேர்ந்த சிங்கப்­பூ­ரர்­கள் தங்களுக்­கிடையே இருக்­கும் வேற்­றுமை­கள் குறித்­துக் கரு­த்தில் கொள்வதற்­குப் பதிலாக ஒற்­றுமை­யில் கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிர­த­மர் டியோ சீ ஹியன் கூறி ­யுள்­ளார். இதன் வழியாக நாம் ஒற்­றுமை­யான சமு­தா­யத்தைக் கட்­டமைக்க முடியும் என்றும் குறிப்­பிட்­டார் தேசிய பாது­காப்பு ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ. பொங்­கோ­லில் இருக்­கும் அல்-இஸ்லா பள்­ளி­வா­சலை பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்­தொ­கு­தியைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளார்­ களின் ஏற்­பாட்­டில் நேற்று சுற்றிப் பார்த்த பிறகு செய்­தி­யா­ளர்­களிடையே அவர் இவ்வாறு சொன்னார்.

சொந்த நாட்டில் தாக்­கு­தல்­கள் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த 27 பங்­ளா­தே‌ஷி ஊழி­யர்­கள் கைது­செய்­யப்­ பட்­ட­தாக கடந்த புதன்­கிழமை அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து அமைச்­சர் இவ்வாறு கருத் ­துரைத்­தார். இது கடந்த 15 ஆண்­டு­களில் எடுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாது­காப்பு நட­வ­டிக்கை என ஸ்ட்­ ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது. பல சமூ­கத்தைச் சேர்ந்த­வர் ஒன்­று­கூடி வாழ்­வ­தால் சிங்கப்­பூ­ரில் சமூக நல்­லி­ணக்­க­மும் அமை­தி­யும் பேணப்­பட்­டுள்­ளா­தாக திரு டியோ சொன்னார்.

அல்-இஸ்லா பள்­ளி­வா­சலைப் பார்வையிட்டவர்களிடையே துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் உரையாடினார். பாசிர் ரிஸ் = பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சன் சூலிங் (பச்சைநிற உடையில்) உடனிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்