'நஜிப்புக்கு எதிராக ஆதாரமில்லை'

'நஜிப்புக்கு எதிராக ஆதாரமில்லை'

1 mins read

மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்­ ஊ­ழல் செய்து பல நூறு மில்­லி­யன் பணத்தைப் பெற்றதற்கான எந்தவி­த­மான ஆதா­ர­மும் இல்லை எனக்கூறி, பெரும் சர்ச்சை­யி­லி­ருந்து அவரை விடு­வித்­துள்­ளார் மலேசிய தலைமைச் சட்ட அதிகாரி முகமட் அஃபண்டி அலி. நஜிப் ரசாக்­கின் தனிப்­பட்ட வங்கிக் கணக்­கில் இருந்த அமெ­ரிக்க டாலர் $681 மில்­லி­யன் ($973 மில்­லி­யன் சிங்கப்­பூர் வெள்ளி) பணம் அவ­ருக்கு சவூதி அரச குடும்பத்­தி­ன­ரால் வழங்கப்­பட்ட பரிசு என்பதை ஊழல் எதிர்ப்பு அமைப்­பின் ஆதா­ரங்களு­டன் எடுத்­துக்­கூ­றினார் அவர்.

இந்த நன்­கொடைக்­குக் காரணம் ஏதும் தரப்­ப­ட­வில்லை. ஆனால் அந்தப் பணத்­தில் ப-யன்­படுத்­தப்­ப­டாத 620 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்­பிக் கொடுக்­கப்­பட்­ட­தாக அவர் தெரிவித்தார். "கிடைத்த தக­வல்களின்ப­டி­யும் ஆதா­ரத்தை வைத்துப் பார்க்­கும் பொழுதும் அரசு தரப்பு வழக்­க­றி­ஞ­ரான நான் நஜிப் எந்தவி­த­மான குற்­றச்­செ­ய­லி­லும் ஈடு­ப­ட­வில்லை என்று திருப்தி அடைந்­துள்­ளேன்," என்றார் தலைமைச் சட்ட அதிகாரி.