சான் ஃபிரான்சிஸ்கோவில் 'ஆப்பிள்', 'ஃபேஸ்புக்' தலைவர்களுடன் பிரதமர் லீ

சான் ஃபிரான்சிஸ்கோவில் 'ஆப்பிள்', 'ஃபேஸ்புக்' தலைவர்களுடன் பிரதமர் லீ

1 mins read
f968406f-47c2-40bb-8214-3726e5cac02b
-

அமெரிக்கப் பயணம் மேற்கொண்டி ருக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது பயணத்தின் இரண்டாவது நாளாளில் வட கலிஃபோர்னிய நகரான சான் ஃபிரான்சிஸ்கோ வில் ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவன ங்களின் தலைவர்களைச் சந்தித் தார். கலிஃபோர்னியாவின் மென் லோ பார்க்கிலுள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கை அவர் முதலில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ஸக்கர் பெர்க் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கணினி நிரலைத் தெரிந்து கொண்டிருக்கும் உலகத் தலை வர்களில் ஒருவர் என்று பிரதமர் லீயை அவர் புகழ்ந் துரைத்துள்ளார்.

சதுர வடிவிலான கலை வேலைப்பாடு ஒன்றை திரு லீக்கு திரு ஸக்கர்பெர்க் அளித்தார். திரு லீயின் ஃபேஸ்புக் பக்கத் திலிருந்து எடுக்கப்பட்ட புகைப் படங்கள் அந்த சதுர நினைவுப் பொருளின் பக்கங்களில் காணப் பட்டன. பிரதமர் லீ கடந்த ஆண்டு எழுதிய கணினி நிரலில் உள்ள வரிகளைப் பயன்படுத்தி அந்த கலைப்பொருள் தயாரிக்கப்பட்டது. 'சுடோகு' புதிர்களைக் கண்டு பிடிப்பதற்கான கணினி நிரல் ஒன்றை கடந்த மே மாதம் பிரதமர் லீ ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண் டார். ஃபேஸ்புக் தலைமையகத்திற்கு பிரதமர் லீ வருகையளித்தது கௌரவத்துக்குரிய ஒன்று என்றும் அவரது வருகையை அங்கீகரிக்கும் வண்ணம் கலைப்பொருள் வழங்கப் படுவதாகவும் திரு ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.

கலைவேலைப்பாடுகளுடனான நினைவுப் பொருளை பிரதமர் லீக்கு ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வழங்கினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு