தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் வட்டாரத்தில் சாலை விபத்து: முதியவர் மரணம்; எட்டுப் பேர் காயம்

1 mins read
a6cae3af-b5d8-4805-8e96-823ac90b9022
-

செங்காங் செண்ட்ரலுக்கும் புவாங் கோக் டிரைவுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் இரண்டு கார்களும் ஒரு டாக்சியும் விபத்துக்குள்ளானதில் 79 வயது முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார். நேற்றுப் பிற்பகல் 12.30 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் எட்டுப் பேர் காயம் அடைந்தனர். அவ்வழியாக கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்திருப்பதைப் பார்த்து உதவி செய்ய விரைந்த தாகத் திரு ஜோசஃப் லீ என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். பயிற்சி பெற்ற துணை மருத்துவ அதிகாரியான திரு லீ, காரின் பயணிக்கான கதவு வழியாக காருக்குள் சென்று தானியக்க இதய இயக்க மீட்புச் சாதனத்தைப் பயன்படுத்தி காருக்குள் சிக்கியிருந்த அந்த முதியவரை மீண்டும் சுய நினைவுக்குக் கொண்டு வர முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அனால் அவரது முயற்சி தோல்வி யில் முடிந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலில் ஒரே ஒரு ஆம்புலன்சை அனுப்பி வைத் திருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து ஆடவர் ஒருவர் அவரது காருக்குள் சிக்கி இருப்பது தெரிய வந்ததாக அது கூறியது. இதனை அடுத்து இரண்டு தீயணைப்பு வண்டிகள், இரண்டு தீயணைப்பு மோட்டார் சைக்கிள் கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள், ஓர் ஆதரவு வாகனம் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்பட்ட தாகக் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.