சிங்கப்பூரில் ஏராளமானோர் கண்டு ரசித்த சூரிய கிரகணம்

சிங்கப்பூரில் ஏராளமானோர் கண்டு ரசித்த சூரிய கிரகணம்

1 mins read
7f3ca2d5-b35b-418e-aa95-5661e8353366
-

சிங்கப்பூரில் நேற்றுக் காலை சூரிய கிரகணத்தின் ஒரு பகுதி தெரிந்தது. சூரியன் உதிக்கத் தொடங்கிய சில நிமி டங்களில் அது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. இந்த அரிய சூரிய கிரகணத்தை சிங்கப்பூர் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர். பிரதமர் லீ சியன் லூங் கும் அவர்களுள் ஒருவர். இதுகுறித்து தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட பிரதமர், சூரிய கிரகணத்தைக் காண பூமலைக்கு தாம் சென்று இருந்த தாகவும் இருப்பினும் தெளிவான படத்தைத் தம்மால் எடுக்க இயலவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

என்றாலும் தமது அலுவலக ஊழியர் ஒருவர் எடுத்த படத்தை பிரதமர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார். அத்துடன் சூரிய கிரகணப் படங்களைத் தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளு மாறு இணையவாசிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் பிரதமரின் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அவற்றில் பல மிகவும் அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டு இருந்தன. வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் எடுத்த இரு புகைப் படங்களும் சிங்கப்பூர் போலிஸ் படையின் 36 வினாடி வீடியோவும் அவற்றுள் அடங்கும். பிரதமரின் அழைப்புக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

பிரதமர் லீ சியன் லூங்கின் ஃபேஸ்புக் மூலம் பீஷானில் இருந்து கெவின் ஹூ என்பவர் பகிர்ந்துகொண்ட படம். படம்: பிரதமர் லீயின் ஃபேஸ்புக்