வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான நிதி உதவியை உயர்த்த திட்டம் இல்லை

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான நிதி உதவியை உயர்த்த திட்டம் இல்லை

1 mins read
49cc430d-4a2a-4735-bfa0-a0a302bb9066
-

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான நிதி உதவியை உயர்த்தும் திட்டம் இல்லை என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள மூத்தோரை அல்லது உடற்குறையுள்ளோரைப் பார்த்துக்கொள்ள வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவு தரும் வகையில் மாதந்தோறும் 120 வெள்ளி நிதி உதவியைத் தற்போதுள்ள திட்டம் வழங்குகிறது.

தற்போது 6,200 குடும்பங்கள் இந்த நிதி உதவியால் பலன் அடைந்து வருவதாக டாக்டர் கோர் குறிப்பிட்டார். இதற்காக கடந்த ஆண்டில் அரசாங்கம் 8.4 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியதாக அவர் தெரிவித்தார்.2016-03-26 07:07:47 +0800