கார் இல்லாத ஞாயிறு நேரம் அதிகம், இடமும் விரிவாக்கம்

கார் இல்லாத ஞாயிறு நேரம் அதிகம், இடமும் விரிவாக்கம்

1 mins read
4c5c7d56-8a67-48dd-8e1e-09094fa10f9b
-

சிங்கப்பூரில் கார் இல்லாத ஞாயிறு நேற்று இரண்டாவது தடவையாக இடம்பெற்றது. அதிக நேரம், அதிக வழித் தடங்களில் கார்கள் இல்லாமல் மக்கள் மனமகிழ்ச்சியுடன் சாலைகளில் விரும்பியபடி சென் றனர்.

மத்திய வர்த்தக வட்டாரத்தில் நேற்று காலை 7.30 முதல் காலை 10 மணி வரையிலும் துணைச் சாலைகள் காலை 7.30 நண்பகல் வரையிலும் கார்களுக்கு மூடப் பட்டன. தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் காலை 7.30 மணிக்கு 150 முதியவர்களுடன் சாலையில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டார். தம் குடியிருப்பாளர்களுக்கு மாதாமாதம் இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சைக்கிளோட்டிகள் தேசிய கலைக்கூடத்துக்கு வெளியே செயிண்ட் ஆண்ட்ரூஸ் ரோட்டில் செல்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்