SG100க்கு வலுவான தேசிய அடையாளம் தேவை

SG100க்கு வலுவான தேசிய அடையாளம் தேவை

1 mins read
f6725315-4992-4f14-b4af-881cf2994ea2
-

சிங்கப்பூர் தன்னுடைய நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவது, வலுவான தேசிய அடையாள உணர்வைப் பொறுத்தே இருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச் சர் சான் சுன் சிங் தெரிவித்தார். சமய, குலவழி, சமூக குழுக் களின் இளம் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பேசினார். சிங்கப்பூரர்களின் தனித் தன்மை, பொதுவான எதிர்காலம் முதலானவை அக்கலந்துரையாட லில் முக்கியமாக விவாதிக்கப்பட் டன. மக்கள் கழகத்தின் துணைத் தலைவரும் தொழிலாளர் இயக்கத் தின் தலைவருமான திரு சான், 200 பேர் கலந்துகொண்ட கலந் துரையாடலில் பல கருத்துகளை முன்வைத்தார்.

பாய லேபாரில் இருக்கும் வாழ்நாள் கற்றல் கல்விக் கழகத் தில் அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெறுவ தால் ஏற்படக்கூடிய லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தேசிய அடையாளத்திற்கும் சிங்கப் பூரின் மேல் கடப்பாடு கொண்டுள்ள குடியுரிமைக்கும் இடையில் இருக் கும் வேறுபாட்டை விளக்க அமைச் சர் முற்பட்டார். "நீங்கள் சிங்கப்பூரில் தங்கி யிருப்பது குறிப்பிட்ட அம்சங்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட் பட்டா? அதாவது பணத்திற்காகவா? வேறு எதற்காகவா?," என்று அவர் கலந்துரையாடலில் கலந்துகொண் டவர்களை நோக்கி கேள்வி எழுப் பினார்.