தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோயில் விபத்து தொடர்பில் ஐவர் கைது; ஏராள வெடிபொருட்கள் பறிமுதல்

1 mins read
13f524b8-1c3c-4b3c-a557-43aa69815e19
-

கேரள மாநிலம் கொல்லம் பர வூரில் உள்ள காளிதேவி கோயி லில் நிகழ்ந்த தீ விபத்து சம் பவம் தொடர்பில் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், வெடிபொருள் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை யான தேவி கோயிலில் ஏழாவது நாளும் கடைசி நாளுமான சனிக்கிழமை இரவு விழாவில் (ஞாயிறு அதிகாலை) பலர் போட்டிப் போட்டு வாணவெடி களை வெடித்ததில் கட்டடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீது தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த கட்டடம் தரைமட்டமானது. அப்போது சுமார் 15,000 பேர் அங்கு திரண்டிருந்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 110 பேர் மாண்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 400க்கு அதி கரித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வாணவேடிக்கை நடத்தியவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியின் ஒப் பந்தக் குத்தகைதாரருமான சுரேந் திரன் என்பவரை போலிசார் தேடி னர். ஆனால் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இந்நிலையில் அவரது வீட்டையும் ஆலையையும் சோதனையிட்டு எட்டு சாக்குப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடி பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காலி வெடிபொருள் உருளைகளைக் கைப்பற்றிய கேரளா காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்