தீப்பற்றியது கார்; திணறினர் வாகன ஓட்டுநர்கள்

தீப்பற்றியது கார்; திணறினர் வாகன ஓட்டுநர்கள்

1 mins read
1f82a61b-c3b0-4a9e-88b0-126e088a8397
-
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையில் நேற்று பிற்பகலில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் அங் மோ கியோ வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையின் பாலஸ்டியர் ரோடு வெளியேற்றத் தைத் தாண்டி விபத்து நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து விரைவுச் சாலையில் ஏற்பட்ட நெரிசலால் வாகனமோட்டிகள் சிரமப்பட்டனர். காரின் என்ஜினில் தீ பிடித்த தாக சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படைக்கு பகல் 1 மணிக்குத் தகவல் கிடைத்தது.