சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து நூறு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சிலேத்தார் ஆகாயப் போக்குவரத்துப் பூங்காவில் புதிய விமானப் பயிற்சி நிலையத்தைத் திறந்துள்ளன. 9,250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலையம் A-380, A-350 உள்ளிட்ட ஏர்பஸ் விமானங்கள் குறித்துப் பயிற்சியளிக்கும். இந்த நிலையத்தில் ஆண்டிற்கு 10,000க்கு மேற்பட்டோர் பயிற்சி பெற இயலும். (படத்தில்) A-=320 விமான பாவனை சாதனத்தில் அமர்ந்து அதன் இயங்குமுறை பற்றிக் கேட்டறியும் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிலேத்தாரில் புதிய விமானப் பயிற்சி நிலையம்
1 mins read
-

