கோ: இந்தியாவின் எழுச்சியில் நம்பிக்கை

கோ: இந்தியாவின் எழுச்சியில் நம்பிக்கை

1 mins read
5f03eff6-923d-4078-b783-5f803891c7fc
-

'இந்தியா காய்ச்­சல்' தொடங்கி யதில் இருந்து இந்­தி­யா­வின் அளப்­ப­ரிய ஆற்­ற­லில் தொடர்ந்து நம்­பிக்கை கொண்­டி­ருக்­கி­றேன். வரும் ஆண்­டு­களில் இந்தியா உயர் வளர்ச்சி விகி­தங்களு­டன் எழுச்சி பெறும் என்று கூறினார் ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங். எனினும் பொரு­ளி­ய­லா­ளர்­கள் சொல்­வ­து­போல் இடைவெளி அதி­க­மாக இருக்­கும். வளப்­ப­மான எதிர்­கா­லத்­துக்கு, இந்தியா பொரு­ளி­யல் மறு­ம­லர்ச்சி, மேம்பாடு, நவீ­ன ­ம­ய­மாக்­க­லில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்­பாக தனது மனி­த­வ­ளத்­தின் திறன் பயிற்­சி­யி­லும் மேம்பாட்­டிலும் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரிகை­யின் இணை ஆசி­ரி­யர் (வெளி விவ­கா­ரம்) ரவி வெல்லூர், 58 எழுதிய 'இந்தியா ரைஸிங்' என்ற நூலை நேற்று வெளி­யிட்டு உரை­யாற்­றினார் திரு கோ. இரு நாடு­களின் மிகச் சிறந்த உறவைக் குறிப்­பிட்டு பேசிய திரு கோ, அதற்கு எடுத்­துக்­காட்­டாக கடந்த ஆண்டில் இரு நாடு­களுக்­கு­மிடை­யே­யான அர­ச­தந்­திர உற­வு­களின் 50 ஆண்டு நிறைவு கொண்டா­டப்­பட்­டதை­யும் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்­கில் பிர­த­மர் நரேந்­திர மோடி பங்­கேற்­றதை­யும் சுட்­டினார்.