யூஹுவா வட்டாரத்தில் உள்ள 3,200 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் விவேகமான செயல்முறைச் சாதனங்களை இப்போது சோதித் துப் பார்க்கலாம். முதியோரைக் கண்காணிக்கும் சாதனம், பயனீட்டுச் சாதனங்களை நிர்வகிக்கும் கருவி ஆகிய இரண் டையும் யூஹுவா குடும்பங்கள் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன. பொது குடியிருப்புப் பேட்டை களில் கட்டிகாக்கக்கூடிய வாழ்க்கை அனுபவங்களை வழங்குகின்ற வீவக பசுமை மண் டலத்தில் அடங்கும் குடும்பங்களுக்கு அந்தச் சாதனங்கள் கிடைக்கும். அவை யூஹுவா சமூக மன்றத்தில் நடக்கும் "My Smart HDB Home @ Yuhua" சாலை காட்சியில் இன்றும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. அந்தச் சாதனங்களை ஜூன் மாதம் வரை இணையம் வழியாக வும் இந்தக் குடும்பத்தினர் வாங்கிக்கொள்ளலாம்.
கலாசார, சமுதாய, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ,. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

