ஊழியர்களுக்குப் பயிற்சிப் படிப்பு; புதிய கல்லூரி உதயம்

ஊழியர்களுக்குப் பயிற்சிப் படிப்பு; புதிய கல்லூரி உதயம்

1 mins read
57abd75e-33be-41f1-8421-8293dc85f9a1
-

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பெரியவர்களில் மேலும் பலருக்குப் பயிற்சிப் படிப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒரு புதிய கல்லூரியைத் தொடங்குகிறது. 'நிபுணத்துவ தொடர்கல்விக் கல்லூரி' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய கல்லூரி, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுடன் சேர்ந்து செயல்பட்டு நிபுணத்துவர் கள், நிர்வாகிகள், மேலாளர்கள் உள்ளிட்ட வேலை பார்க்கும் பெரியவர்களுக்காக பயிற்சிப் படிப்புகளை உருவாக்கும். இந்தப் பல்கலைக்கழகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது.

தொழிற்சங்கக் காங்கிரசுடன் கூடிய பங்காளித்துவத் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய கல்லூரி 28 இளநிலை பயிற்சிப் படிப்புகளைப் பகுதிநேரப் படிப்பாக வரும் ஆகஸ் டில் தொடங்கும். வகுப்புகள் தீவு முழுவதும் உள்ள தொழிற்சங்கக் காங்கிரஸ் கட்டடங்களில் அல்லது இந்தப் பல்கலைக்கழகத்தில் நடக்கும். தேசிய தொழிற்சங்கக் காங் கிரஸ் இத்தகைய பங்காளித்துவ உறவின் மூலம் உயர்கல்வி நிலை யம் ஒன்றை அமைப்பது இதுவே முதல் தடவை என்று காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் தெரிவித்தார்.