அமைச்சர் குணமடைய குவியும் பிரார்த்தனைகள்

அமைச்சர் குணமடைய குவியும் பிரார்த்தனைகள்

1 mins read
fbc09964-b2b7-49d8-aac9-da3162b5c5a1
-

நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நலம்பெற்று வீடு திரும்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிர முகர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் பிரார்த்திப்பதோடு பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஹெங்குக்கு டான் டோக் செங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அமைச் சரவைக் கூட்டத்தில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அமைச் சர் ஹெங் பக்கவாதத்தால் பாதிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளை யில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் நரம்பியல் அறுவை சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் அமைச் சர் ஹெங்கின் பொறுப்புகளை துணைப்பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் கவனிப்பார் என்று அறி விக்கப்பட்டது. நேற்று மாலை அனைத்து சமய மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் தர் மன், அங்கு திரு ஹெங்கைப் பற்றிப் பேசினார்.

சமயத் தலைவர்கள் பிரார்த்தனையில் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்னமும் பங்கேற்றார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்