தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய நிறுவனத்தின் பேருந்து சேவை தொடங்கியது

1 mins read
09b1b706-15e5-4515-a5f4-77530175dd8b
-

சிங்கப்பூரில் முதல் முறையாக 3வது பேருந்து நிறுவனமான டவர் டிரான்சிட், நேற்று ஒன்பது பேருந்து சேவைகளை அதிகாரபூர்வமாகத் தொடங் கியது. இதன் மூலம் நாட்டின் பொதுப்பேருந்து சேவைகளில் புதிய தொடக்கம் ஏற்பட்டு உள்ளது. எஸ்எம்ஆர்டி பேருந்து நிறு வனத்திடமிருந்து 90 பேருந் துகள் கைமாற்றப்பட்ட பிறகு டவர் டிரான்சிட்டின் முதல் பேருந்து சேவை நேற்று அதி காலை 5.00 மணியளவில் புக் கிட் பாத்தோக் பேருந்து நிலை யத்தில் தொடங்கியது. ஆனால் அதற்கும் முன்பாக விடியற்காலை 3.00 மணிக்கே அங்கு கூடிய 20க்கும் மேற் பட்ட பேருந்து ஆர்வலர்கள், பச்சை நிறத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாகக் காட்சியளித்த பேருந்தை வரவேற்று, படம் பிடித்து புதிய அனுபவத்தைப் பதிவு செய்தனர்.

அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் டவர் டிரான்சிட் பேருந்துகளுக்கான பச்சை நிறத்தை பொதுமக்களே தேர்வு செய்திருந்தனர். நேற்று டவர் டிரான்சிட்டின் முதல் பேருந்தில் ஏறிய பயணி களில் ஒருவரான 18 வயது மாணவர் ஷாஹிர்வான் நூர், முதல் அனுபவத்தைப் பெற விரும்புவதாகக் கூறினார். பேருந்து நிலையத்தில் டவர் டிரான்சிட்டின் முதல் அறிவிப் புப் பலகை நிறுவுவதையும் அவர் நேரில் கண்டார். "டவர் டிரான்சிட்டிடம் ஒப் படைப்பதற்கு முன்பு முந்தைய நாள் இரவு எஸ்எம்ஆர்டியின் கீழ் செயல்பட்ட எண் 945 பேருந் தில் பயணம் செய்தேன். அதன் பிறகு மறுநாள் புதிய நிறுவனத் தின் கீழ் அதே பேருந்தில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றேன்," என்றார் அவர்.