ஹில்லரி: நியமன வெற்றி பெண்களுக்கு ஒரு 'மைல்கல்'

ஹில்லரி: நியமன வெற்றி பெண்களுக்கு ஒரு 'மைல்கல்'

1 mins read
2df3ac84-6288-4205-9d09-c4f2576bea99
-

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முறையாக ஒரு பெண் போட்டியிடும் சாதனை ஹில்லரி கிளிண்டன் மூலம் நிறைவேற இருக்கிறது. ஜனநாயக கட்சி யின் வேட்பாளருக்குத் தேவைப் படும் பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுவிட்டார்.

வேட்பாளர் நியமனத்தை வென்றதும் நியூயார்க்கிலுள்ள புரூக்ளின் நகரில் உரையாற்றிய திருவாட்டி ஹில்லரி, 68, இது பெண்களுக்கு ஒரு மைல்கல் என்று வெற்றி முழக்கமிட்டார்.

இந்த நிலையை எட்டுவதற்காக இதுவரை ஏராளமான ஆண், பெண் தலைமுறைகள் கடுமையாகப் போராடி இருப் பதாகவும் தியாகங்கள் செய்தி ருப்பதாகவும் அவர் குறிப்பிட் டார். இந்தச் சாதனையை எட்ட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் தமக்கு ஆதரவளிக்க முன்வந்தோ ருக்குத் தாம் நன்றிக்கடன்பட் டிருப்பதாகச் சொன்னார்.2016-06-09 06:00:00 +0800

புரூக்ளின் நகரில் தமது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரத்தை பகிர்ந்து கொண்டார் திருவாட்டி ஹில்லரி. படம்: ராய்ட்டர்ஸ்