ஊழியர்கள் உடல்நலனுக்கு உதவ முன்மாதிரித் திட்டம்

ஊழியர்கள் உடல்நலனுக்கு உதவ முன்மாதிரித் திட்டம்

1 mins read
5faa5ad6-298e-46a3-ba17-743f319e410c
-

தொழிற்பேட்டைகளில் செயல்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், ஊழியர்களுக்கான நலமிக்க வாழ்க்கை நடவடிக்கைகள் மூலம் பலன் அடைய இருக்கின்றன. இத்தகைய உதவிக்கரங்கள் அந்த நிறுவனங்களுக்கு அவற் றின் வாசலிலேயே கிடைக்க இருக் கின்றன. உடல்நலப் பரிசோதனைகள், மாதாந்தர உடல்நலப் போதனை வகுப்புகள், புகைப்பதைத் தடுப் பதற்கான செயல்திட்டங்கள் முதலானவை இந்த நடவடிக்கை களில் அடங்கும். 'உடல்நல வேலையிடச் சுற்றுப் புற முன்மாதிரித் திட்டம்' நேற்று தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ= யில் தொடங்கப்பட்டது.

அந்தப் பேட்டையில் சுமார் 800 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை வாக னப் பட்டறை, மரவேலை முதலான வற்றில் ஈடுபடுகின்றன. தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ-யில் 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பாதிப் பேருக்கு வயது 40க்கும் மேல். இந்தச் சூழலில் அவர்கள் உடலைச் பரிசோதித்து அவர்கள் உடலில் முற்றிய நோய் ஏதாவது இருந்தால் அதைக் கண்டறிந்து அந்த நோய்களைச் சமாளிப்பதில் இந்தப் புதிய உடல்நல மேம்பாட்டுச் செயல்திட்டங்கள் ஒருமித்த கவனம் செலுத்தும்.

சுகாதார மூத்த துணை அமைச்சரும் வேலையிட சுகாதார முத்தரப்பு மேற்பார்வைக் குழுவின் தலைவருமான டாக்டர் ஏமி கோர், தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ=யில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நலமிக்க வேலையிட சுற்றுப்புற திட்டத்தைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்