டோவர் கிரசெண்டில் இருக்கும் புளோக் 28=பியில் நேற்று மின்சாரம் தடைப்பட்டது. அந்த புளோக்கில் உள்ள நான்கு மின்தூக்கிகளும் சுமார் 1 மணி நேரம் செயல்படவில்லை. பிற்பகல் 12.26 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் பிற்பகல் 1.17 மணி முதல் மின்தூக்கிகள் இயங்கத் தொடங்கியதாகவும் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மின்தடைக்கான காரணம் பற்றி தான் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் மன்றம் கூறியது. படம்: ஃபேஸ்புக்.காம்/ ஜெஸ்தியா
டோவர் கிரசெண்ட் வீவக புளோக்கில் மின்தடை
1 mins read
-

