அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் டாலஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து போலிசார் மாண்டனர். ஆறு பேர் காயமுற்றனர். அமெரிக்க நேரப்படி வியாழக் கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வன்செயல்களில் ஈடுபட்ட நால்வரில் மூவரைப் பிடித்து வைத்துள்ளதாக அவர்கள் கூறினர். சுற்றிவளைத்தபோது போலிசாரை நோக்கி நான்காவது சந்தேக நபர் சரமாரியாகச் சுட்டான்.
நகரம் முழுவதும் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பதாக வும் அவன் உரக்கக் கத்தியதாக வும் தெரிவித்த போலிசார், சுற்றிவளைத்து நெருங்கியபோது தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு அவன் மாண்டதாகக் கூறினர். மரணமடைவதற்கு முன்னர் அவன் கூறிய மறைவான இடங் களில் வெடிப்புக் கருவிகள் இருக் கின்றனவா என்று போலிசார் தீவிரமாகத் தேடினர். 'பயங்கரவாதச் சம்பவம்' என்று போலிசார் இந்தத் தாக்குதலை வகைப்படுத்தி உள்ளனர். அண்மையில் லுயியானாவி லும் மினசோட்டாவிலும் இரு கறுப்பின ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து டாலஸ் நகரில் நடத்தப்பட்ட ஊர் வலத்தில் வன்செயல் மூண்டது.

